திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வ.உ. சிதம்பரனார் வீதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகள் சங்கீதாவுக்கும், சென்னிமலை சரவணா நகரைச் சேர்ந்த பழனிச்சாமியின் மகன் அருண் என்பவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்தது. திருமணமான நாளில் இருந்து கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாட்டால் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், அருண் சரிவர வீட்டிற்கு வராமல் இருந்ததாக கூறப்படுகிறது.
மாமனார் டார்ச்சர்; இளம்பெண் போலீசில் புகார்
ஈரோடு: தொடர் பாலியல் தொல்லை கொடுக்கும் மாமனார் மீது நடவடிக்கை எடுக்ககோரி இளம்பெண் ஒருவர் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனைத் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முயன்ற அருணின் தந்தை பழனிசாமி, வீட்டில் தனியாக இருக்கும் மருமகள் சங்கீதாவிற்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இது தொடர்பாக கணவர் அருணிடம், சங்கீதா பலமுறை கூறியும் கண்டு கொள்ளாமல், உன்னுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்று அருண் கூறி வந்துள்ளார். இதனால் மாமனாரின் பாலியல் தொல்லை அதிகரித்துள்ளது. இதனைத் தாங்கிக்கொள்ள முடியாமல், மாமனார் மீது நடவடிக்கை எடுக்ககோரியும், தனது கணவருடன் சேர்த்து வைக்ககோரியும் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சங்கீதா தனது குடும்பத்தினருடன் வந்து புகார் அளித்துள்ளார்.