தமிழ்நாடு

tamil nadu

கல்லால் மானை அடித்துக் கொன்ற நபர் கைது ; 5 பேர் தலைமறைவு

By

Published : Jan 29, 2020, 11:26 PM IST

ஈரோடு: கல்லால் மானை அடித்துக் கொன்ற ஆறு பேர் கொண்ட கும்பலில் ஒருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

கல்லால் மானை அடித்துக் கொன்ற நபர் கைது
கல்லால் மானை அடித்துக் கொன்ற நபர் கைது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வன கோட்டத்தில் உள்ள கேர்மாளம் வனச்சரகத்திற்குற்பட்ட சிக்குநள்ளி வனப்பகுதியில் மான் வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் கேர்மாளம் வனச்சரக அலுவலர் அமுல்ராஜ், வனத்துறை அலுவலர்கள் ரோந்து சென்றனர்.

அப்போது சிக்குநள்ளி வனப்பகுதியில் ஆறு பேர் கொண்ட கும்பல் புள்ளிமானை வேட்டையாடி மான் இறைச்சியை கூறுபோட்டு கொண்டிருந்தனர். வனத்துறையினரை கண்டதும் ஆறு பேரும் தப்பியோடினர். இதில் ஒரு நபரை மட்டும் வனத்துறையினர் விரட்டிப் பிடித்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் சிக்குநள்ளி கிராமத்தைச் சோந்த திருமன் என்பதும் அதே ஊரைச் சேர்ந்த முத்தான், மாரிசாமி, வேலன், ராமன், மாரன் ஆகியோருடன் சேர்ந்து மானை வேட்டையாடியதும் தெரியவந்தது. பின்னர் திருமனிடமிருந்து 10 கிலோ மான் இறைச்சியை பறிமுதல் செய்த வனத்துறையினர் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையிலடைத்தனர்.

மேலும், தப்பியோடிய ஐந்து பேரை ஆசனூர் மாவட்ட வன அலுவலர் கே.வி.ஏ நாயுடு உத்தரவின்பேரில் வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கல்லால் மானை அடித்துக் கொன்ற நபர் கைது

இதையும் படிங்க:நாய்களுக்கு பயந்து கிணற்றில் விழுந்த மான் - உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறை

ABOUT THE AUTHOR

...view details