ஈரோடு திண்டல் அருகேயுள்ள நல்லியம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் ராஜீவ். இவர் ஈரோடு மாணிக்கம்பாளையம் அருகேயுள்ள வக்கீல் தோட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவர் பணியாற்றி வந்த நிறுவனத்தில் தகவல் பரிமாற்ற கோபுரம் அமைப்பதற்காக நவீன வகையிலான இரன்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான உயர் ரக பேட்டரிகள் வைக்கப்பட்டன.
ஈரோட்டில் பேட்டரி திருட்டு வழக்கு - நான்கு பேர் கைது!
ஈரோடு : தனியார் நிறுவனத்தில் இருந்து ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பேட்டரிகளை திருடிச் சென்ற நான்கு பேரை வீரப்பன்சத்திரம் காவல்துறையினர் கைது செய்தனர்.
erode Battary theft issue
இந்த விலையுயர்ந்த பேட்டரி ரகங்கள், உபகரணப் பொருள்களை நிறுவனத்தின் பூட்டை உடைத்து அடையாளம் தெரியாத நான்கு பேர் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து வீரப்பன்சத்திரம் காவல் நிலையத்தில் ராஜீவ் புகார் அளித்தார்.
அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், உயர் ரக பேட்டரி ரகங்களைத் திருடிச் சென்ற தினேஷ், புவனேஸ்வரன், சரத்குமார், கிருஷ்ணமூர்த்தி ஆகிய நான்கு பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ 1.75 லட்சம் மதிப்பிலான பேட்டரிகளை பறிமுதல் செய்தனர்.