தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டின் அடிப்படையே காவிதான் - அண்ணாமலை!

ஈரோடு: சிவகிரியில் நடைபெற்ற இளைஞர் எழுச்சிக் கூட்டத்தில் உரையாற்றிய பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் அடிப்படை என்பதே காவிதான் என்றும், வருகிற தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக அதிக விழுக்காடு ஓட்டு பெற்ற கட்சியாக விளங்கும் எனத் தெரிவித்தார்.

அண்ணாமலை
அண்ணாமலை

By

Published : Sep 27, 2020, 6:55 PM IST

பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் சூறாவளிச் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில் இன்று (செப்.27) ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள அண்ணாமலை மாவட்டம் முழுவதும் கட்சியின் இளைஞர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களைச் சந்தித்து உரையாற்றினார். பின்னர், ஈரோடு மாவட்டம் சிவகிரியில் நடைபெற்ற இளைஞர் எழுச்சிக் கூட்டத்தில் உரையாற்றிய அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர், ”வேளாண் மசோதா மிகவும் சிறப்பாகத் திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வருகிற 2025ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளுக்கு வேளாண் விளை பொருட்களுக்கு இரட்டிப்பு விலை கிடைக்கவுள்ளது. அதிமுக பாஜக கூட்டணி திருமண பந்தத்தைப் போல் நிலையானதாக அமைந்துள்ளது.

பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு

பெரியார் சிலைகள் மீது காவி வர்ணம் பூசியது பாஜகவினர் இல்லை, யாரோ விஷக்கிருமிகள்தான் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுள்ளனர். அதற்கும் பாஜகவிற்கும் எவ்வித தொடர்புமில்லை. தமிழ்நாடு பாஜகவினர் வன்ம அரசியலில் ஈடுபடத் தெரியாதவர்கள். வேளாண் சட்டத்தைக் குறித்து எதிர்க்கட்சிகள் விவசாயிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் அடிப்படை என்பதே காவிதான். வருகிற தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக அதிக விழுக்காடு ஓட்டு பெற்ற கட்சியாக விளங்கும்” எனக் கூறினார்.

இதையும் படிங்க:

சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கரோனா!

ABOUT THE AUTHOR

...view details