ஈரோடு மாவட்ட எல்லையில், தெங்குமரஹாடா ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணியாற்றிய ஜெயமோகன், உடல்நலக்குறைவால் கோவை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனால் கிராமத்தில் தங்கி சேவை செய்த மருத்துவரை இழந்த, அக்கிராமம் சோகத்தில் மூழ்கியது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், நீலகிரி மாவட்டத்தின் வனப்பகுதியில் அடர்ந்த மலைகளுக்கு மத்தியில் தெங்குமரஹாடா கிராமம் அமைந்துள்ளது.
இக்கிராமத்தைச் சுற்றிலும் மாயாறு ஓடுகிறது. இதனால் மக்கள் பரிசல் மூலம் மாயாற்றைத் தாண்டி கிராமத்துக்குள் செல்கின்றனர். சுமார் 5 ஆயிரம் பேர் வசிக்கும் இக்கிராமத்தில் மருத்துவ சேவைக்கு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. அடர்ந்த காட்டுப்பகுதி என்பதால் இங்கு தங்கிப் பணியாற்ற வேண்டும் என்பதால் டாக்டர்கள் எவரும் முன் வரவில்லை. இந்நிலையில் சிறுமுகையைச் சேர்ந்த இளம் மருத்துவர் மரு.ஜெயமோகன் (26) என்பவர், விருப்பம் தெரிவித்து 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.