ஈரோடு:சமீப காலமாக வெளி மாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, கஞ்சா போன்றவை அதிகளவில் கடத்தி வரப்படுகின்றன. இதனால் ரயில்வே காவல்துறையினர் அவ்வப்போது ரயில்களில் சோதனை மேற்கொள்கின்றனர்.
அந்த வகையில் ஈரோடு ரெயில் நிலையத்தில், வட தென் மாநிலங்களில் இருந்து அதிகளவில் ரயில்கள் வருவதனால், ஈரோடு ரயில்வே காவல்துறையினர் தினமும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ரயில் நிலையத்திற்கு வரும் ஒவ்வொரு ரெயில் பெட்டிகளை சென்று சோதனை செய்து வருகின்றனர்.
கேட்பாரற்று கிடந்த கஞ்சா
இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று (அக்.24) காலை 6.30 மணி அளவில் ஈரோடு ரயில் நிலையத்திற்கு வந்தது. இதையடுத்து ஈரோடு ரயில்வே பாதுகாப்பு படையினர், வழக்கம் போல் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலை சோதனை செய்தனர். ஒவ்வொரு அப்போது ஒரு பெட்டியில் சந்தேகப்படும் வகைகள் பை ஒன்று இருந்தது.