ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதியில் வாழை சாகுபடி அதிகளவில் உள்ளது. இங்கு விளையும் வாழைரகங்கள் கேரளா, கர்நாடகாவிற்கு அதிகளவில் அனுப்பப்படுகின்றன. சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு நாள்களில் வாழைக்காய் ஏலம் நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கூட்டுறவு சங்கத்தில் ஏலம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டம் பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்ட நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாழைக்காய் ஏலம் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த ஏலத்திற்கு கேரளாவிலிருந்து 50க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வருவது வழக்கம். ஆனால் இம்முறை கரோனா காரணமாக ஏலம் எடுக்க ஐந்து வியாபாரிகள் மட்டுமே வந்துள்ளனர். கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வாழைத்தார்கள் வரத்து இருந்த நிலையில் ஏலத்தில் 1400 வாழைத்தார்கள் மட்டுமே விற்கப்பட்டன.
இதில் பாதி வாழைக்காய் தார்கள் விற்பனையாகவில்லை. வாழைக்காய் விலை நிலவரம்: கதலி ரக வாழை கிலோ ரூ. 21, நேந்திரன் கிலோ ரூ. 32 , தேன் வாழை தார் ரூ. 515 செவ்வாழை ரூ. 585 , ரஸ்தாளி ரூ. 460 , பூவன் ரூ. 310 , பச்சை நாடன் ரூ. 335, ஜி9 ரூ. 200 க்கும் அதிகமாக விலைபோனது. மொத்தமாக இந்த ஏலத்தில் 1450 வாழைத்தார்கள் ரூ 2.75 லட்சத்துக்கு மட்டுமே விற்பனையானது.
இதையும் படிங்க:தாமதமாக கிடைத்த அனுமதி.. வேதனையில் பனைத் தொழிலாளர்கள்!