ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்திருந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு மேலாக நோய்த் தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு, பெருந்துறை கரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து ஈரோடு மாவட்டத்திற்குள் நுழைபவர்கள் யாராக இருந்தாலும், எந்த வாகனத்தில் வந்தவர்களாக இருந்தாலும் கரோனா பரிசோதனை மேற்கொண்ட பிறகே அனுமதிக்கப்படுவார்கள். கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல் எந்த நபர்களும் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மாவட்டத்திலுள்ள அனைத்து எல்லைப் பகுதிகள், சோதனைச் சாவடிகளில் கரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.