தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நகராட்சியால் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளால் ஆபத்து!

நீலகிரி: குன்னூரில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் பயனற்று கிடப்பதால் குழந்தைகள் விழும் அபாய நிலை உள்ளது.

borwell

By

Published : Oct 29, 2019, 11:04 PM IST

நீலகிரியில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க பல ஆண்டுகளாகத் தடை உள்ளது. எனினும், 2016ஆம் ஆண்டு கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டன.

இதில், குன்னூர் பகுதியில் 2016 ஜூலை 16ஆம் தேதி உழவர் சந்தை அருகே புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி நகராட்சி சார்பில் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வண்ணாரப்பேட்டை, புரூக் லேண்ட் உள்ளிட்ட 10 இடங்களில் நகராட்சி சார்பில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டன. இதில் உழவர் சந்தையில் இருக்கும் ஆழ்துளைக் கிணறு சாக்கு பை, கற்கள், சிமெண்ட் உள்ளிட்டவைகளால் மூடப்பட்டது.

ஆப்பிள் பீ என்ற இடத்தின் சாலை ஓரத்திலேயே உள்ள ஆழ்துளைக் கிணறு திறந்தவெளியில் உள்ளதால், குழந்தைகள் விளையாடும்போது உள்ளே தவறி விழுந்துவிழும் அபாயம் உள்ளது. மேலும், மழைக் காலங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டால் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படும் நிலை இருக்கிறது. இது தொடர்பாக நகராட்சி அலுவலர்கள், அப்பகுதியை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர்.

இதையும் படிங்க:பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளை இலவசமாக மூடிவரும் இளைஞர்!

ABOUT THE AUTHOR

...view details