தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிறிஸ்து புகழ் பாடி நடந்த குருத்தோலை ஊர்வலம் - ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

கோபிசெட்டிபாளையத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற குருத்தோலை நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர்.

கிறிஸ்து புகழ் பாடி நடந்த குருத்தோலை ஊர்வலம்
கிறிஸ்து புகழ் பாடி நடந்த குருத்தோலை ஊர்வலம்

By

Published : Apr 10, 2022, 6:53 PM IST

ஈரோடு:இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறையப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு ஜெருசலம் நகரில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவரது சீடர்களாகிய மக்கள், அவரை வரவேற்க தென்னை மரத்தின் குருத்தோலையை அவர் நடந்து செல்லும் பாதையில் வைத்து, அதன் மீது அவரை அழைத்து வந்தனர்.

அதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் சாம்பல் புதன் எனப்படும் வசந்த கால நாளில் தொடங்கி 40 நாள்கள் ஞாயிறு தவிர மற்ற நாள்களில் விரதம் இருக்கும் கிறிஸ்தவர்கள் 40ஆவது நாளில் குருத்தோலை நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வர். அதன் ஒரு பகுதியாக இன்று கோபிசெட்டிபாளையத்தில் உள்ள திரு இருதய ஆண்டவர் ஆலயம், சி.எஸ்.ஐ தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் குருத்தோலை நிகழ்ச்சி நடைபெற்றது.

கிறிஸ்து புகழ் பாடி நடந்த குருத்தோலை ஊர்வலம்

இதில், ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தின் போது கையில் குருத்தோலையை ஏந்தி இயேசு கிறிஸ்துவை புகழ்ந்து பாடி சென்றனர். அதைத் தொடர்ந்து தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:வேளாங்கண்ணியில் 'குருத்தோலை ஞாயிறு' உற்சாகம்

ABOUT THE AUTHOR

...view details