தமிழகத்தில் மழை பெய்யும்போது வெள்ளநீர் சேமித்து விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி பாசன திட்டத்தின் கீழ் வாய்க்கால் பராமரிப்பு பணிகள் துவக்கப்பட்டன.
கோபிசெட்டிபாளையம் பகுதியில் இதற்கான பணிகள் துவங்கின. பாண்டியம்பாளையம் கீழ்பவானி வாய்க்கால் பராமரிப்பு பணிகளுக்கு ரூ. 45 லட்சம் செலவில் சேதமடைந்துள்ள வாய்க்கால் அகலப்படுத்தும் பணியும் ரூ. 28 லட்சம் செலவில் கவுந்தப்பாடி கிளை வாய்க்கால் தலைப்பு மதகு மற்றும் நீர்கசிவு பெருமளவு ஏற்படும் பகுதியில் இருபுறமும் பாதுகாப்பு சுவர் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கூகலூர் வாய்க்காலில் ரூ. 39 லட்சம் செலவில் 7வது மைலில் சக்கரபாளையம் கிளை வாய்க்காலில் மண்கரைகள் சேதமடைந்த பகுதிகளில் பாதுகாப்பு சுவர் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.