திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக பவானிசாகர் அணை விளங்குகிறது. இதனிடையே கடந்த சில நாள்களாக நீலகிரியில் மழை பொழிந்துவருவதால், 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்குத் நீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருகிறது. அதன்படி இன்று (அக். 1) பவானிசாகர் வட்டாரத்தில் மழையளவு 14.4 மி.மீட்டராகப் பதிவாகியுள்ளது. அணைக்கு நீர்வரத்து நேற்று 2,826 கனஅடியாக இருந்த நிலையில் இன்று நீர்வரத்து 6,958 கனஅடியாக அதிகரித்துள்ளது.