ஈரோடு:பவானிசாகர் அணை முன்பு 15 ஏக்கர் பரப்பளவில் அணை பூங்கா அமைந்துள்ளது. கரோனா பெருந்தொற்று காரணமாக பொது மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்க ஜனவரி 15 முதல் 17ஆம் தேதி வரை பூங்காவில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தொடர் பொங்கல் விடுமுறையை கொண்டாடுவதற்காக பவானிசாகர் அணைக்கு வந்த சுற்றுலா பயணிகள் அணை பூங்கா மூடப்பட்டதை கண்டு ஏமாற்றமடைந்தனர். இதனைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் அணை முன்பு உள்ள பவானி ஆறு மற்றும் கீழ்பவானி வாய்க்கால் பகுதிகளில் குடும்பத்துடன் நீரில் இறங்கி குளித்து மகிழ்ந்தனர்.