தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோட்டில் கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்பு

ஈரோடு: கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த நகராட்சி அலுவலர்கள் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்பு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கரோனா பாதிப்பை கட்டுப்படுத்த ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு
கரோனா பாதிப்பை கட்டுப்படுத்த ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு

By

Published : Apr 8, 2021, 5:02 PM IST

Updated : Apr 8, 2021, 7:04 PM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக புதிய தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நகராட்சி அலுவலர்கள் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்பு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அதில் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும், அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும், தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என அலுவலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் வணிக நிறுவனங்களில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

கரோனா பாதிப்பை கட்டுப்படுத்த ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு

இதையும் படிங்க: திருவிழாக்கள், மதம் சார்ந்த நிகழ்வுகளுக்குத் தடை - தமிழ்நாடு அரசு

Last Updated : Apr 8, 2021, 7:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details