ஈரோடு: கடந்த 2020ஆம் ஆண்டில், அப்போதைய அமைச்சர் எஸ்.பி. வேலுமணியிடம் கார் ஓட்டுநராக இருப்பதாகவும், தனக்கு உயர் அதிகாரிகள் பழக்கம் இருப்பதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் வேலை வாங்கித் தருவதாகவும் சுதாகர் எனும் ஒருவர் மாணிக்கம்பாளையத்தைச்சேர்ந்த தவமணி என்பவரிடம் கூறியுள்ளார்.
இதனை நம்பிய தவமணி மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் 20 பேர் சுமார் ஒரு கோடி ரூபாய் ரொக்கப் பணத்தை பல்வேறு தவணைகளில் கொடுத்துள்ளனர். இதற்காக போலியாக பணி நியமன உத்தரவைக் கொடுத்த சுதாகர், கரோனா முடிந்தபின் பணியில் சேரலாம் எனக்கூறி அதனைத் திரும்பப் பெற்றுள்ளார்.