கரோனா பெருந்தொற்று தடுப்புப் பணிகளை மேற்கொள்ளும் விதமாக ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது நோய்த் தொற்றானது தமிழ்நாட்டில் அதிகமாகப் பரவி வருவதால் திண்டுக்கல் மாவட்டத்தில் நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்கும் பொருட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
அதன் அடிப்படையில் வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்து வாகனங்களில் வரும் நபர்களாலேயே அதிகமான நோய்த்தொற்று பரவுவதால், ஏற்கெனவே திண்டுக்கல் மாவட்ட எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. தற்போது கூடுதலாக, மேலும் 7 சோதனைச் சாவடிகள் குறுக்குச்சாலைகளில் அமைக்கப்பட்டு, சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இ-பாஸ் இல்லாமல் இம்மாதம் 12ஆம் தேதி திண்டுக்கல் மாவட்ட எல்லைக்குள் வந்த 15 வாகனங்களைப் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சென்னை போன்றப் பகுதிகளில் இருந்து வரும் பயணிகள், தாமாகவே முன்வந்து, கரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதலில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
'இ-பாஸ் இல்லாமல் வாகனங்களை திண்டுக்கல்லுக்குள் அனுமதிக்க முடியாது!'
திண்டுக்கல்: இ-பாஸ் இல்லாமல் மாவட்ட எல்லைக்குள் வரும் அனைத்து வாகனங்களும் பறிமுதல் செய்து, சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இ-பாஸ் இல்லாமல் வாகனங்கள் திண்டிகுலுக்குள் அனுமதியில்லை
'முக்கியமாக இ-பாஸ் இல்லாமல் திண்டுக்கல் மாவட்ட எல்லைக்குள் வரும் அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்' என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஊரடங்கால் வேலையின்றி பாலியல் தொழிலுக்குச் சென்ற இளம்பெண்கள்!