திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து வனசரகர் ஆனந்த்குமார் தலைமையில் வனப்பகுதிகளில், வனத்துறை அலுவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பிரகாசபுரம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த நான்கு பேரை விசாரித்தனர். இதில் ஜெயராமன், சலேத்ராஜ், சேவியர், கண்ணன் ஆகியோர் காட்டுப் பன்றியை வேட்டையாடியது தெரியவந்தது.
கொடைக்கானலில் காட்டுபன்றியை வேட்டையாடிய 4 பேர் கைது மேலும், பிடிபட்ட நான்கு பேரிடம் இருந்து துப்பாக்கி, வேட்டையாடப்பட்ட பன்றியும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இவர்கள் மீது வனசரக சட்டத்தில் ஐந்து பிரிவுகளின் கீழ் வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் சம்பந்தப்பட்ட இருவர் தப்பிவிட்டதால் அவர்களையும் தேடும் பணிகள் நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க: ஜேஎன்யு தாக்குதல் குறித்த வழக்கு: குற்றப்பிரிவுக்கு மாற்றம்