தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சண்முகநதியில் 24 அடி வேல் அகற்றம்.. பக்தர்கள் அதிர்ச்சி!

பழனி சண்முகநதியில் தைப்பூசத்தை முன்னிட்டு வேல் வழிபாட்டுக்காக நிறுவப்பட்டிருந்த சுமார் 24 அடி உயரமுள்ள வேல் சிலையை பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறையினர் இன்று அதிகாலை அகற்றினர்.

வேல் சிலை அகற்றம்
வேல் சிலை அகற்றம்

By

Published : Feb 2, 2023, 11:58 AM IST

வேல் வழிபாட்டுக்காக நிறுவப்பட்ட வேல் சிலை அகற்றம்

திண்டுக்கல்: பழனி சண்முகநதியில் தூய்மைப்பணி மற்றும் சண்முகநதி ஆராத்தி நிகழ்ச்சிகளை மெய்த்தவம் பொற்சபை மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் கடந்த நான்கு ஆண்டுகளாகச் செய்து வருகின்றன. அதே போல தைப்பூசத்தின் போது சுமார் 24 அடி உயரமுள்ள பித்தளையினால் ஆன வேல் சிலையை அங்கு வைத்து திருவிழா முடிந்த பின் அகற்றி விடுவது வழக்கம்.

அந்த வகையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன் வேல் சிலை அங்கு வைக்கப்பட்டது. தைப்பூசத் திருவிழா வரும் பிப்.7ம் தேதி முடிந்த பிறகு இந்த சிலையை அகற்றி விடுவதாக வழிபாட்டுக் குழுவினர் தெரிவித்திருந்தனர். ஆனால் நேற்று இரவு திடீரென சிலையை அகற்ற வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அதிகாலை வேல்சிலை அகற்றப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் விடுத்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேல் சிலை அகற்றப்பட்டது. பொக்லைன், கிரேன் உதவி கொண்டு சிலையின் பீடம் தகர்க்கப்பட்டது. இதையடுத்து சிலையை லாரியில் ஏற்றி போலீஸார் கொண்டு சென்றனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சிக்குள்ளானர்.

இதுகுறித்து மெய்த்தவ அடிகள் கூறுகையில், “நான்கு ஆண்டுகளாக எந்த இடையூறுமின்றி வேல் வழிபாடு நடைபெற்று வந்தது. இந்நிலையில் திடீரென அதிகாரிகள் சிலையை அகற்றுமாறு தெரிவித்தனர். கால அவகாசம் கூட வழங்காது வேல்சிலையை அகற்றுமாறு கூறினர்.

காலையில் சிலையை அகற்றியும் விட்டனர். எந்த ஆக்கிரமிப்பும் இன்றி சிலை வைக்கப்பட்டிருந்தது. தமிழக முதலமைச்சரும், அரசியல் பிரமுகர்களும், முருக பக்தர்களும் சிலை தைப்பூசம் நிறைவு பெறும் வரை மீண்டும் வைத்து வழிபாடு நடத்த வழி செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: "செயற்கையான ஆவின் பால் விலை உயர்வை கட்டுப்படுத்துக" - தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் சங்கம்

ABOUT THE AUTHOR

...view details