தமிழ்நாடு

tamil nadu

திருநங்கை மீது தாக்குதல்: காவல் துறையைக் கண்டித்து போராட்டம்!

By

Published : Oct 8, 2020, 4:20 PM IST

திண்டுக்கல்: திருநங்கை சமந்தா மீது தாக்குதல் நடத்திய காவலர்களைக் கண்டித்து திருநங்கைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநங்கைகள் போராட்டம்
திருநங்கைகள் போராட்டம்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சாலை முத்தமிழ் நகரில் வசித்துவந்தவர் சமந்தா என்னும் திருநங்கை. அவர் வீட்டின் முன்பாக சிலர் மணல் திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

அதற்கு சமந்தாவின் வீட்டிலிருந்த நாய்கள் இடையூறாக இருந்ததால், அவற்றை மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் விஷம் வைத்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது. அதனால் சமந்தா காவல் துறையில் புகார் அளித்தார். ஆனால் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில் அகில இந்திய மக்கள் வளர்ச்சிக் கழகம் சார்பாக திருநங்கைகள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் அவர்கள், "சமந்தா மீது பொய் வழக்கு போட்டு காவல் துறையினர் மிரட்டுகின்றனர்.

திருநங்கைகள் போராட்டம்

அவரின் வீடு புகுந்து தாக்கி இழிவாகப் பேசி உள்ளனர். எனவே தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தனர்.

மேலும் இந்தப் போராட்டத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஜானகி, மாவட்ட செயலாளர் ராணி, நகர செயலாளர் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:திருநங்கை மீது பொய் புகார்: கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை!

ABOUT THE AUTHOR

...view details