தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடைக்கானலில் பேருந்துப் போக்குவரத்து நிறுத்தம்!

திண்டுக்கல் : 'புரெவி பயல்' முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடைக்கானலில் இன்று மாலை முதல் பேருந்துப் போக்குவரத்து நிறுத்தப்படும் என சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் அறிவித்துள்ளார்.

The bus service in Kodaikanal will be suspended from today  Kodaikanal bus service stoped  சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன்  Sub Collector Sivaguru Prabhakaran  கொடைக்கானலில் இன்று முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்  கொடைக்கானல் போக்குவரத்து நிறுத்தம்
Kodaikanal bus service stoped

By

Published : Dec 3, 2020, 4:08 PM IST

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து, கொடைக்கானலில் நேற்று (டிச.02) லேசான சாரல் மழையும் பெய்து வந்தது.

இந்நிலையில், விடிய விடிய நகர்ப் பகுதிகளான நாயுடுபுரம், அப்சர்வேட்டரி, செண்பகனூர், பள்ளங்கி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்மழை பெய்து வருவதால், சாலைகளிலும் அருவிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கொடைக்கானலில் தொடர்ந்து பெய்யும் சாரல் மழை

காற்றுடன் கூடிய மழையும் நீடித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடைக்கானலில் இன்று மாலை ஏழு மணி முதல் பேருந்துப் போக்குவரத்து நிறுத்தப்படும் என சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார். மேலும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'குறைவான பேருந்து இயக்கம்... கூடுதல் செலவு': பாதிப்புக்குள்ளாகும் கிராமப்புற மக்கள்

ABOUT THE AUTHOR

...view details