தமிழ்நாடு

tamil nadu

300 ஆண்டு பழமை வாய்ந்த கோயிலில் உண்டியல் திருட்டு!

By

Published : Jul 28, 2021, 11:53 AM IST

நிலக்கோட்டை அருகே 300 ஆண்டு பழமை வாய்ந்த கோயிலில் நேற்று முந்தினம் (ஜூலை 26) நள்ளிரவில் இரண்டு உண்டியல்களை உடைத்து கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

கோயில் உண்டியல்  உண்டியல் திருட்டு  கோயில் உண்டியல் திருட்டு  திண்டுக்கல்லில் கோயில் உண்டியல் திருட்டு  திருட்டு  திண்டுக்கல் நிலக்கோட்டையில்கோயில் உண்டியல் திருட்டு  குற்றச் செய்திகள்  திண்டுக்கல் செய்திகள்  dindigul news  dindigul latest news  dindigul temple hundi theft  temple hundi theft  hundi theft
உண்டியல் திருட்டு

திண்டுக்கல்:நிலக்கோட்டை அருகே முசுவனூத்து அணைப்பட்டி சாலையில், 300 ஆண்டுகள் பழமையான 24 மனை தெலுங்கு செட்டியார்களுக்கு பாத்தியப்பட்ட வீரியகாரியம்மன் குலதெய்வ கோயில் உள்ளது.

நேற்று முன்தினம் நள்ளிரவு (ஜூலை 26) இக்கோயிலின் 10 அடி சுவரில் ஏறி குதித்து அடையாளம் தெரியாத நபர்கள், கோயிலின் உள்ளே புகுந்துள்ளனர்.

பின்னர் கோயிலில் இருந்த 2 உண்டியல்களையும் பெயர்த்து எடுத்து, அதன் பூட்டை உடைத்து, அதில் இருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர்.

இந்தநிலையில் நேற்று காலை கோயிலுக்கு வந்த பூசாரி உண்டியல்கள் பெயர்த்து எடுக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் இது குறித்து நிலக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டன்ர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: ரேஷன் அரிசி, கோதுமை மூட்டைகள் பதுக்கல் - ஒருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details