திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சமத்துவ மக்கள் கட்சித் தொண்டர் ஒருவரின் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட நடிகர் சரத்குமார் மணமக்களை ஆசிர்வதித்தார்.
பின்பு செய்தியாளர்களைச் சந்தித்து அவர், “குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் இஸ்லாமியர்கள், குடியுரிமை திருத்தச் சட்டத்தைப் பொறுத்தவரை முழுவதும் படிக்க வேண்டும்.
அதேபோல், அந்தச் சட்டத்தில் இஸ்லாமியரை நாடு கடத்தவும் என உள்ளதா என்பதைக் காட்டுங்கள் பார்ப்போம். ஆகவே, போராட்டக்காரர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை முழுவதுமாக தெரிந்துகொண்டு போராட வேண்டும்.
திருமண விழாவில் கலந்துகொண்ட சரத்குமார் இல்லையெனில், தமிழ்நாடு முதலமைச்சரைச் சந்தித்து அதில் என்ன தவறு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்ட பின்பு இஸ்லாமியர்கள் போராட வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: சிஏஏ-வுக்கு எதிரான கண்டன பொதுக் கூட்டம்!