திருநெல்வேலி மாவட்டத்தில் 1938ஆம் ஆண்டு பிறந்தவர் டி.செல்வராஜ். தோல் பதனிடும் தொழிலாளர்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு இவர் இயற்றிய 'தோல்' நாவலிற்காக 2012ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றார்.
இவர் வயது மூப்பின் காரணமாக கடந்த சில நாட்களாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இவரது இறுதிச்சடங்கு இன்று பிற்பகல் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக தொழிலாளர்களின் வாழ்வியல் சூழலை விவரிக்கும் தேநீர், தோல் போன்ற நாவல்களை இவர் எழுதியுள்ளார். தலித் மக்களின் பிரச்னைகளை மையப்படுத்தி மலரும் சருகும் என்ற தலித் நாவலையும், 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 70க்கும் மேற்பட்ட நாடகங்களையும் இவர் எழுதியுள்ளார். மேலும், வழக்கறிஞரான செல்வராஜ், தொழிலாளர்கள் நலனுக்காக பல்வேறு வழக்குகளிலும் வாதாடி வென்றுள்ளார். இவரது நாவல்கள், சிறுகதைகள் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு..!