திண்டுக்கல் பேருந்து நிலையத்தின் அருகே திருவள்ளூர் சாலையில் கட்டட வேலை நடைபெற்றது. அப்போது கட்டுமானத் தொழிலாளர்கள் மண் அள்ளிய போது பிறந்த சில மாதங்களே ஆன பெண் குழந்தை புதைக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து தொழிலாளர்கள் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
கட்டட வேலைக்கு மண் அள்ளும்போது மீட்கப்பட்ட பச்சிளங்குழந்தையின் சடலம்! - மீட்பு
திண்டுக்கல்: கட்டட வேலைக்காக மண் அள்ளிய போது பிறந்த சில மாதங்களே ஆன பெண் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது அப்பகுதியினரிடயே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை
புதைக்கப்பட்ட பச்சிளங் குழந்தையின் சடலம் மீட்பு
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் உடனடியாக பச்சிளங் குழந்தையின் சடலத்தை சாக்கு போட்டு மூடினர். அதையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு குழந்தையின் சடலத்தை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். பச்சிளங் குழந்தையை வீசி சென்றது யார் என்பது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.