திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செங்குளம் பகுதியில் தனியார் கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த கல்குவாரியால் அருகே உள்ள கிராம குடியிருப்பு பகுதிகளில் கல்குவாரிகளில் இருந்து வெடித்து சிதறும் கற்கள் விழுவதால் வீடுகள் சேதமடைவதாகவும், கிராம மக்கள் காயமடைவதாகவும் கூறி கடந்த வாரம் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அரசு அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த பின் கலைந்து சென்றனர்.
கல்குவாரியை மூடக்கோரி பெண்கள் போராட்டம்!
திண்டுக்கல்: நத்தம் அருகே கல்குவாரியை மூடக்கோரி பெண்கள் பலர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
protest
ஆனால் கல்குவாரி மறுநாளில் இருந்து வழக்கம் போல் செயல்பட தொடங்கியது. மேலும் அரசு அலுவலர்கள் கல்குவாரியினர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் 50க்கும் மேற்பட்ட பெண்கள் நத்தம் வாட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். பின் நத்தம் தாசில்தார், கனிம வள அலுவலர்கள் நடத்திய பேச்சு வார்த்தையில், கல்குவாரியை மூட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் கலைந்து சென்றனர்.