திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா பெருந்தொற்று வேகமாகப் பரவிவருகிறது. சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரிந்துவந்த காவலர் ஒருவருக்கும், அவரது மனைவிக்கும் கரோனா பெருந்தொற்று உறுதிசெய்யப்பட்டது. இது காவலர்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் காவல் நிலையங்களுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டர்கள்: எஸ்.பி. உத்தரவின்பேரில் வழங்கல்
திண்டுக்கல்: கரோனா பெருந்தொற்று காரணமாக காவல் நிலையத்திற்கு ஒன்று வீதம் பல்ஸ் ஆக்ஸிமீட்டர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் உத்தரவின்பேரில் வழங்கப்பட்டது.
இந்நிலையில் மாவட்ட காவலர்களின் பாதுகாப்பிற்காகவும், காவலர்கள் தங்களைப் சுயபரிசோதனை செய்து கொள்வதற்காகவும் பல்ஸ் ஆக்ஸிமீட்டர்கள் வழங்கப்பட்டன. இதன்மூலம் நாடித்துடிப்பு, நுரையீரலில் உள்ள ஆக்சிஜன் அளவை (ரத்த ஓட்டத்தில் உள்ள ஆக்சிஜன் அளவைப் பொறுத்து) எளிதாகத் தெரிந்துகொள்ளலாம்.
தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்ட ஒழுங்கு காவல் நிலையம், அனைத்து போக்குவரத்து காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம், திண்டுக்கல் ஆயுதப்படை, அனைத்து காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவற்றிக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டர் ஒன்று வீதம் மொத்தம் 70 பல்ஸ் ஆக்ஸிமீட்டர்கள் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் உத்தரவின்பேரில் வழங்கப்பட்டுள்ளன.