தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அங்கன்வாடி மையத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை!

திண்டுக்கல்: புதிய கட்டடம் கட்டி ஓராண்டாகியும், அது திறக்கப்படாததால் குழந்தைகள் ஓட்டு அறையில் தவித்து வருகின்றனர்.

Public request to open Anganwadi center

By

Published : Jul 31, 2019, 7:03 AM IST

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஆவிச்சிப்பட்டியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஆவிச்சிபட்டி பகுதியைச் சேர்ந்த பெரும்பாலானோர் விவசாயி மற்றும் கூலித்தொழிலாளர்களாக உள்ளனர். இங்குள்ள அங்கன்வாடி மையத்தில் 25 குழந்தைகள் படித்து வருகிறார்கள்.

அங்கன்வாடி மையத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை

இப்பகுதி மக்கள் புதிய கட்டடம் கட்டி அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 8.5லட்சத்தில் அங்கன்வாடி மையம் கட்டி முடிக்கப்பட்டு ஒரு வருடம் கடந்தும் திறக்கப்படாமல் உள்ளது.

அடிப்படை வசதியில்லாத தனியார் ஒட்டு வீட்டை வாடகை எடுத்து அதில் உள்ள அறையில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. ஓட்டு அறைக்குள் அடைந்து கிடக்கும் குழந்தைகள் மின்சார வசதி, தண்ணீர் பற்றாக்குறையால் பெரும் தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
இதனால், குழந்தைகளை அங்கன்வாடி மையத்துக்கு அனுப்புவதை பெற்றோர்கள் தவிர்த்து வருகின்றனர். 4 முதல் 5 மாணவர்கள் மட்டுமே தொடர்ந்து அங்கன்வாடிக்கு வருகிறார்கள்.

பல அங்கன்வாடிகளில் குழந்தைகள் இல்லாமல் தவித்து வரும் நிலையில், கட்டடம் இருந்தும் நிர்வாகக் குறைபாடு காரணமாக குழந்தைகள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய கட்டடத்தை திறந்து வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details