திண்டுக்கல் மாவட்ட ஊட்டச்சத்து அலுவலராகப் பணியாற்றி வருபவர், பூங்கோதை. இவர் சத்துணவு ஊழியர்கள் மற்றும் அமைப்பாளர்கள் மீது பணி சார்ந்த குற்றச்சாட்டுகளை எழுப்பி அவர்களுக்கு குறிப்பாணை(Memo) கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் ஊட்டச்சத்து அலுவலரின் நடவடிக்கையைக் கண்டித்து நேற்று இரவு(அக்.08) திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள மாவட்ட ஊட்டச்சத்து அலுவலகம் முன்பு, சத்துணவு ஊழியர்கள் மற்றும் அமைப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்கள் மீது மாவட்ட ஊட்டச்சத்து அலுவலர் பூங்கொடி வேண்டுமென்றே பொய்ப் புகார்கள் தெரிவித்து பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறினர்.