கரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதிலும் கூட பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஊரடங்கு உத்தரவின் காரணமாக அமைப்பு சாரா தொழிலாளர்கள் வேலை இல்லாததால் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இவர்களுக்கு உதவும் வகையில் அரசு உதவித் தொகை வழங்கினாலும் அது போதுமானதாக இல்லை என்பதால், பல்வேறு தரப்பினரும் ஏழை மக்களுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகேவுள்ள சின்னமாநாயக்கன்கோட்டை கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இங்கு வசித்து வரும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் 5 கிலோ அரிசி, காய்கறி தொகுப்பு பை மற்றும் பலசரக்கு சாமான்களை கூட்டுறவு பண்டக சாலையினராலும், காவல் துறையினராலும் வழங்கப்பட்டது.