தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வே பிரிட்ஜ் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் கைது!

திண்டுக்கல்: பழனியில் லாரி உரிமையாளர்களுடன் இணைந்து வே பிரிட்ஜில் எடை அளவை குறைத்து முறைகேட்டில் ஈடுபட்டவந்த நபர்களை புகாரின்பேரில் காவல் துறையினர் கைது செய்தனர்.

வே பிரிட்ஜ் முறைகேட்டில் ஈடுபட்டவந்த நபர்கள் கைது
வே பிரிட்ஜ் முறைகேட்டில் ஈடுபட்டவந்த நபர்கள் கைது

By

Published : Jun 18, 2021, 4:46 PM IST

திண்டுக்கல் மாவட்டம் பழனி சிவகிரிபட்டி பைபாஸ் சாலையில் அமைந்துள்ள பழனிஆண்டவர் வேபிரிட்ஜில் வேலை செய்துவருபவர் வசந்த். இவர் வே பிரிட்ஜ்க்கு சரக்கு வாகனங்களில் பொருள்களை கொண்டுவரும் லாரி ஓட்டுநருடன் கூட்டு சேர்ந்து, லாரியிலுள்ள பொருளின் எடை அளவைக் குறைத்துக்காட்டி முறைகேட்டில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், பாலசமுத்திரம் கிராமத்தில் ரமேஷ் என்பவரின் சேம்பரில் இருந்து பழைய இரும்புகளை ஏற்றிவந்த லாரியை வே பிரிட்ஜில் எடை போட்டபோது, லாரியிலிருந்த பொருளைவிட நான்கு டன் அளவிற்கு எடையைக் குறைத்துக் காண்பித்து வசந்த், பாசித் ஆகிய இருவரும் சேர்ந்து முறைகேடு செய்துள்ளனர்.

சந்தேகமடைந்த ரமேஷ் மற்றொரு வே பிரிட்ஜில் எடை பார்த்தபோது, லாரியில் நான்கு டன் அளவிற்கு பொருள்கள் அதிகமாக இருந்தது தெரியவந்தது. உடனடியாக காவல் துறையினரை அழைத்து முறைகேடு குறித்து புகார் தெரிவித்து, இருவரையும் ஒப்படைத்தார்.

இது தொடர்பாக பழனி நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைதுசெய்தனர். இச்சம்பவம் பற்றி தகவலறிந்து, பாதிக்கப்பட்ட பலரும் வே பிரிட்ஜ் முன்பு கூடினர். தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்ட வே பிரிட்ஜ்க்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details