திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் எம் எம் தெருவைச் சேர்ந்த சந்திரன் என்பவர் கடந்த மூன்று நாள்களாக காணவில்லை என காவல் நிலையத்தில் அவரது மனைவி காந்திமதி புகாரளித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து, இன்று (பிப். 22) காலை கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் நகராட்சி அலுவலகம் எதிரே சடலம் ஒன்று மிதப்பதாக காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை, தீயணைப்பு துறையினர் படகு மூலம் சடலத்தை மீட்டனர். இந்த விசாரணையில் அவர் எம் எம் தெருவைச் சேர்ந்த சந்திரன் என்பது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அவரின் உடல் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து கொடைக்கானல் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:கடலூர் என்கவுன்டர்: சம்பவ இடத்தில் காவல் துறை விசாரணை