திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தற்போது கோடை சீசன் களைகட்டியுள்ளது. இதனால் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்து செல்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததால், வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொடைக்கானல்- வத்தலக்குண்டு பிரதான சாலையில், மச்சூர், பெருமாள் மலை உள்ளிட்ட பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாலம் அமைக்கும் பணிகள் மிகவும் தாமதமாக நடந்து வருகிறது.
பாலம் அமைக்கும் பணிகளால் போக்குவரத்து நெரிசல் - சுற்றுலாப்பயணிகள் அவதி!
கொடைக்கானல்-வத்தலக்குண்டு பிரதான சாலையில் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் சீசன் நேரத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
kodaikanal
இந்த பணிகள் காரணமாக போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பணிகளை நெடுஞ்சாலை துறையினர் விரைந்து முடிக்க வேண்டும் அல்லது இந்த பணிகளை தற்காலிகமாக நிறுத்தி, சீசன் காலம் முடிந்தவுடன் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சென்னை புறநகர் பகுதியில் இடியுடன் கூடிய கன மழை