தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 12, 2021, 5:28 PM IST

ETV Bharat / state

கொடைக்கானலில் பற்றி எரியும் காட்டு தீ - கண்டுக்கொள்ளாத வனத்துறை!

திண்டுக்கல்: கொடைக்கானல் மயிலாடும் பாறை அருகேயுள்ள தோகைவறை என்ற இடத்தில் பல ஏக்கர் அளவில் எரிந்து வரும் காட்டு தீயால் பல அறிய வகை மரங்கள் தீயில் கருகி நாசமாகின.

kodaikanal forest fire
kodaikanal forest fire

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மேலும் மாலை வேளையில் குளிர் அதிகரித்தும் அதிகாலையில் உறைபனியும் நீடித்து வருகிறது. இதனால் கொடைக்கானலை சுற்றியுள்ள வனப்பகுதிகள், தரிசு பட்டா நிலங்கள் ஆகியவை வரண்டு கருகி காணப்படுகிறது.

இந்நிலையில், மயிலாடும் பாறை அருகேயுள்ள தோகைவறை என்ற இடத்தில் பல ஏக்கர் அளவில் காட்டு தீ பரவி எரிந்து வருகிறது. இதனால், அரிய வகை மூலிகை மரங்களும், செடிகளும் தீயில் கருகியது. தொடர்ந்து காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதால் தீ அருகே உள்ள நிலங்களிலும் பரவி வருகிறது. இதனால் வனவிலங்குகள் நகர்ப்பகுதிக்குள் வரக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

கொடைக்கானலில் பற்றி எரியும் காட்டு தீ

இதற்கிடையே, தீயை கட்டுப்படுத்த வனத்துறை அலுவலர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே பரவி வரும் தீயை கட்டுப்படுத்த வேண்டுமென அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ’சசிகலாவை சந்திக்கும் திட்டம் இல்லை’ - பிரேமலதா

ABOUT THE AUTHOR

...view details