திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாக பிரையண்ட் பூங்கா அமைந்துள்ளது. இங்கு பல லட்ச வண்ணப்பூ நடவுசெய்யப்பட்டு பராமரிக்கப்பட்டுவருகிறது.
சுற்றுலாப் பயணிகளைக் கவரும் ஜப்பான் மர ரோஜா! - kodaikanal bryant park
திண்டுக்கல்: கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் மர ரோஜா பூ சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

ரோஜா ரோஜா
தற்போது இங்குள்ள மர ரோஜா பூ பூத்துக் குலுங்குகின்றது. இவை ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பூ எனவும் கூறப்படுகிறது.
இந்த ரோஜா பூ சிவப்பு, வெள்ளை ஆகிய வண்ணங்களில் தற்போது பூத்துக் குலுங்குகிறது. மரத்தில் பூக்கும் ரோஜா பூ சுற்றுலாப் பயணிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.