தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Income Tax Raid: திரவிய தொழிற்சாலையில் அதிரடி சோதனை

Income Tax Raid: நிலக்கோட்டையில் உள்ள வாசனை திரவிய தொழிற்சாலையில்வருமான வரித் துறையினர் ஐந்து மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தினர்.

வருமான வரித்துறை சோதனை
வருமான வரித்துறை சோதனை

By

Published : Jan 1, 2022, 6:47 AM IST

Income Tax Raid: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை - வத்தலகுண்டு பிரதான சாலை தீயணைப்பு அலுவலகம் அருகே மும்பையைச் சேர்ந்த பங்கஜ் ஜெயின் என்பவருக்குச் சொந்தமான பிராகதி அரோமா என்ற வாசனைத் திரவிய தொழிற்சாலை செயல்பட்டுவருகிறது.

இங்கு நேற்று (டிசம்பர் 31) காலை 8 மணிமுதல் வருமான வரித் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். உத்தரப் பிரதேசத்திலிருந்து வருகைதந்த வருமானவரித் துறை அலுவலருடன் மதுரை மண்டல வருமானவரித் துறை அலுவலர்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் தொடர் சோதனை மேற்கொண்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. மேலும் நிறுவனத்தின் அனைத்து வாயில்களும் பூட்டப்பட்டு வெளிநபர்கள், பணியாளர்கள் யாரும் அனுமதிக்கப்படாமல் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து சோதனை நடைபெற்றது.

தொடர் அதிரடி சோதனை

இதையும் படிங்க:'ஆட்சியைப் பிடிக்க வேண்டியதில்லை; எங்களைக் கேட்டுதான் ஆட்சி நடக்கும்'

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details