தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 21, 2023, 10:01 AM IST

ETV Bharat / state

தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் அளித்திருப்பதை வரவேற்கிறேன் - தொல். திருமாவளவன்

திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜெயலலிதாவிற்குப் பிறகு சட்ட ரீதியாக எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பது வரவேற்கத்தக்கது எனத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையம் இபிஎஸுக்கு அங்கீகாரம் அளித்திருப்பதை வரவேற்கிறேன் - தொல். திருமாவளவன்
தேர்தல் ஆணையம் இபிஎஸுக்கு அங்கீகாரம் அளித்திருப்பதை வரவேற்கிறேன் - தொல். திருமாவளவன்

தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் அளித்திருப்பதை வரவேற்கிறேன் - தொல். திருமாவளவன்

திண்டுக்கல்: செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், “சமூக நீதிக் காவலர் வி.பி.சிங்கிற்கு தமிழ்நாட்டில் திரு உருவ சிலை திறப்பது என்ற அறிவிப்பை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்றுப் பாராட்டுகிறது. வருகிற 22ஆம் தேதி கிருஷ்ணகிரியில் நடந்த ஆணவ படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆணவ படுகொலை தடுப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளும், சலுகைகளும் பெற்றுத் தர தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். அதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரவேற்கிறோம். சமூக நீதி வரலாற்றில் இது ஒரு மைல் கல்லாகப் பார்க்கப்படுகிறது.

திமுக தலைமையில் அமைந்துள்ள வலுவான கூட்டணியில் எந்த சிக்கலும் கிடையாது. திமுகவிற்கும் விடுதலை சிறுத்தைகளுக்கும் இடையே உள்ள நட்புணர்வு, கொள்கை சார்ந்த உறவு தேர்தல் களத்தில் மட்டுமல்லாது சமூக நீதிக்கான களத்திலும் தொடர்ந்து இணைந்து பயணிக்கக் கூடிய வலுவைப் பெற்று இருக்கக் கூடியதாகும். அதனால் தொடர்ந்து நாங்கள் திமுக கூட்டணியில் பயணம் செய்து கொண்டு இருக்கிறோம்.

கர்நாடகத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி காங்கிரசுக்கு முழு ஆதரவு அளிக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நான் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளேன். தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்து வரவேற்கிறேன்.

ஜெயலலிதாவிற்குப் பிறகு சட்ட ரீதியாக எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பது வரவேற்கத்தக்கது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆர்எஸ்எஸ் தொண்டனாகவும், முழுக்க முழுக்க அரசியல்வாதியாகவும் செயல்பட்டு வருகிறார். ஜாதி அரசியல், மத அரசியல், சனாதன அரசியலை ஆதரித்து சமூக நீதி அரசியலுக்கு எதிராகப் பேசி வருகிறார்.

ஆளுநர் ரவி அவர்கள், அரசியல் பொறுப்பை உணர்ந்து, பதவிப் பொறுப்பை உணர்ந்து கடமை ஆற்ற வேண்டுமே தவிர அரசியல் பணிகள் செய்வது ஏற்புடையது அல்ல. இந்தப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளைத் தேர்தல் அறிக்கையில் கூறியது போல் நிறைவேற்றத் தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும். இது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. இதனைத் தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும்” எனப் பேசினார்.

இதையும் படிங்க:திண்டுக்கல்லில் வாட்டி வதைக்கும் வெயில் - சூடு பிடித்த மண்பானை விற்பனை!

ABOUT THE AUTHOR

...view details