HEAVY TRAFFIC IN KODAIKANAL: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும்.
இந்நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகையானது தற்போது அதிகரித்துள்ளது.
தரைப் பகுதியில் நிலவும் வெப்பத்தைத் கொடைக்கானலில் நிலவும் குளிரை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.
கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களான மோயர் பாயிண்ட், குணா குகை, பைன் மரக்காடுகள், பசுமைப் பள்ளத்தாக்கு, உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.
மேலும் கொடைக்கானல் நட்சத்திர ஏரியை சுற்றி சைக்கிள் சவாரி, குதிரை சவாரி செய்தும் மற்றும் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்து வருகின்றனர்.
மேலும் தொடர் விடுமுறையால் கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள் அப்சர்வேட்டரி சாலை, ஏரி சாலை, பாம்பார்புரம், வெள்ளி நீர்வீழ்ச்சி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாகன நெரிசல் ஆனது ஏற்பட்டது.
இதனால் சுற்றுலாப் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் ஒரு சுற்றுலா தளத்திலிருந்து மற்றொரு சுற்றுலா தளத்திற்கு செல்ல மிகுந்த தாமதம் அடைந்ததாகவும் சுற்றுலாப்பயணிகள் வருத்தம் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:குர்குர்ரே ஆலையில் விபத்து - 10 பணியாளர்கள் உயிரிழப்பு