தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 24, 2020, 5:33 PM IST

ETV Bharat / state

பாதிக்கப்பட்ட பயணிக்கு இழப்பீடு வழங்காத‌ அரசு பேருந்து ஜ‌ப்தி.!

திண்டுக்க‌ல்: விபத்தினால் பாதிக்கப்பட்ட பயணிக்கு இழப்பீடு வழங்காத‌ அரசு விரைவு பேருந்து நீதிம‌ன்ற‌ உத்தரவின் பேரில் ஜ‌ப்தி செய்யப்பட்டுள்ளது.

government bus was caught for pending compensation
இழப்பீடு வழங்காத‌ அரசு விரைவு பேருந்து நீதிம‌ன்ற‌ உத்தரவின் பேரில் ஜ‌ப்தி செய்யப்பட்டுள்ளது

திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌ல் ப‌குதியைச் சேர்ந்த‌ பாக்கிய‌ராஜ் என்ப‌வ‌ர‌து ம‌னைவி ராய‌ம்மாள் க‌ட‌ந்த‌ 2013ஆம் ஆண்டு கொடைக்கான‌லில் இருந்து சென்னைக்கு அர‌சு மித‌வை பேருந்தில் சென்றுள்ளார்.

பெர‌ம்ப‌லூர் அருகே பேருந்து செல்லும் போது விப‌த்து ஏற்ப‌ட்ட‌து. இதில் ராயம்மாளுக்கு இடுப்பு ம‌ற்றும் த‌லையில் காய‌ம் ஏற்ப‌ட்ட‌து. இத‌ற்கு ம‌ருத்துவ‌ சிகிச்சைக்கு த‌ங்க‌ளுக்கு இழப்பீடு வ‌ழ‌ங்க‌ வேண்டுமென‌ 2014ஆம் ஆண்டு நீதிம‌ன்ற‌த்தில் பாக்கிய‌ராஜ் வ‌ழ‌க்கு தொடுத்திருந்தார்.

இத‌னை விசாரித்த‌ நீதிப‌திக‌ள் ம‌ருத்துவ‌ செல‌வு ம‌ற்றும் வழ‌க்கு செல‌வு உள்ப‌ட‌ 1 ல‌ட்ச‌த்து 12 ஆயிர‌ம் ரூபாய் இழ‌ப்பீடு வ‌ழ‌ங்க‌ வேண்டும் என உத்திர‌விட்டனர். ஆனால் இதுவ‌ரை அரசு பேருந்து க‌ழ‌க‌ம் இழ‌ப்பீடு வ‌ழ‌ங்க‌வில்லை என‌ கூற‌ப்ப‌டுகிற‌து.

பயணிக்கு இழப்பீடு வழங்காத‌ அரசு விரைவு பேருந்து நீதிம‌ன்ற‌ உத்தரவின் பேரில் ஜ‌ப்தி செய்யப்பட்டுள்ளது

இத‌னைத் தொட‌ர்ந்து த‌ற்போது இழ‌ப்பீடு வ‌ழ‌ங்காத‌ அரசு பேருந்தை ஜ‌ப்தி செய்ய‌ நீதிப‌தி கோத‌ண்ட‌ராஜ் உத்தர‌விட்டார். அதனைத் தொடர்ந்து கொடைக்கான‌லில் இருந்து நாக‌ர்கோவில் செல்ல‌ இருந்த‌ அர‌சு மித‌வை பேருந்தை நீதிம‌ன்ற‌த்தின் ஊழிய‌ர்க‌ள் ஜ‌ப்தி செய்து கொடைக்கான‌ல் நீதிம‌ன்ற‌த்தில் ஒப்ப‌டைத்தனர்.

இதையும் படிங்க:

நஷ்ட ஈடு வழங்காத அரசுப் பேருந்து ஜப்தி!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details