திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் அமைந்துள்ள கீழ் மலைப் பகுதிகளான பேத்துப்பாறை, புலியூர், அஞ்சு வீடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் விவசாயத்தையே பிரதானத் தொழிலாக செய்து வருகின்றனர்.
இப்பகுதியில் பீன்ஸ், வாழை, பலா, ஆரஞ்சு உள்ளிட்டவை அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் யானைக் கூட்டம், உணவிற்காக விவசாய நிலங்களுக்குள் புகுந்து பலா, வாழை போன்ற பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
இதனால், அப்பகுதி விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே கரோனா வைரஸ் தாக்கத்தால், விளைபொருள்களை விற்க முடியாமல் தவித்துவரும், விவசாயிகளை இது மேலும் வேதனையடையச் செய்துள்ளது.
விளைநிலங்களை சூறையாடிய யானைகள்! இது குறித்து பல முறை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும்; எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவிக்கும் விவசாயிகள், யானைக்கூட்டம் விவசாய நிலங்களுக்குள் புகாமல் இருக்க வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் பார்க்க: 20 லட்சம் கோடி - என்னென்ன திட்டங்கள்? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!