தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடைக்கானலில் உலாவரும் ட்ரோன் கேமராக்கள் - அச்சத்தில் பொதுமக்கள்

திண்டுக்கல்: கொடைக்கானல் பகுதியில் அனுமதி பெறாமல் உலாவரும் ட்ரோன் கேமரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

ட்ரோன் கேமரா
ட்ரோன் கேமரா

By

Published : Jan 9, 2021, 5:29 PM IST

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொடைக்கானல் பகுதி மிகவும் முக்கியச் சுற்றுலாத் தலமாக உள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகைதருகின்றனர். அதிலும் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து பயணிகள் வருகைதருகின்றனர்.

இதற்கிடையில் கொடைக்கானல் அடர்ந்த வனப்பகுதி என்பதால், சில இடங்கள் பாதுகாக்கப்பட்ட இடங்களாக உள்ளன. ஒருபக்கம் கொடைக்கானலுக்கு வரும் பயணிகள் இயற்கை எழில் காட்சிகளைத் தங்களின் கேமராக்கள், செல்போன்களில் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

மற்றொரு பக்கம் வானில் பறக்கும் ஆளில்லா ட்ரோன் கேமராக்கள் மூலமாகவும் புகைப்படம் எடுக்கப்படுகிறது. ஆனால் காவல் துறை மூலம் முறையான அனுமதி பெற்ற பிறகே, ஆளில்லா ட்ரோன் கேமராக்கள் இயக்க அனுமதிக்கப்படுகிறது.

இந்நிலையில் கொடைக்கானலுக்கு வரும் பயணிகள் சிலர் அனுமதி பெறாமல் ஆளில்லா ட்ரோன் கேமராக்களை இயக்குவதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தொடர்ந்து இது நடைபெற்றுவந்தால், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் கொடைக்கானலைத் தாக்க நேரிடும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கையும் எழுந்துள்ளது.

இதையும் படிங்க:பழுதடைந்து காணப்படும் கிராம நிர்வாக அலுவலகம்: புதுப்பித்து தரக் கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details