திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சிறுகுடியைச் சேர்ந்தவர் பிரபு(35). அதே ஊரைச் சேர்ந்த வெங்கடேசன்(22) இருவரும் உறவினர்கள். இவர்களுக்குள் கடந்த சில நாள்களுக்கு முன் சொத்துப் பிரித்ததில் முன்பகை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரபு, வெங்கடேசன் இருவருக்கும் இடையில் சொத்துப்பங்கீடு குறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் வெங்கடேசன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரபுவைக் குத்தியுள்ளார். இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் நத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், பிரபு பரிதாபமாக உயிரிழந்தார்.