தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருநங்கைகளுக்கு எச்சரிக்கை விடுத்த திண்டுக்கல் எஸ்.பி!

பழனியில் பக்தர்களிடம் கட்டாய பணம் வசூலிக்கும் திருநங்கைகள்‌ குறித்து புகார் வந்தால் குண்டர் சட்டம் பாயும் என திருநங்கைகளுக்கு திண்டுக்கல் மாவட்ட எஸ்பி சீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Dindigul SP Srinivasan warned Transgenders
Dindigul SP Srinivasan warned Transgenders

By

Published : Jan 9, 2022, 12:37 PM IST

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் திருநங்கைகளுக்கான மறுவாழ்வு விழிப்புணர்வு உள்ளரங்க கூட்டம் நேற்று (ஜன.8) நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எஸ்பி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், பழனி கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் திருநங்கைகள் கட்டாய பணம் வசூலிப்பது குற்றமாகும். பக்தர்கள் விரும்பி கொடுக்கும் பணத்தை பெறாமல், அவர்களை மிரட்டி அதிக பணம் பிடுங்குவதாக தொடர் புகார்கள் வருவது கவலையை ஏற்படுத்துகிறது.

வேலைவாய்ப்பு வழங்கப்படும்

எனவே, பழனிக்கு வரும் பக்தர்களை திருநங்கைகள் சூழ்ந்துகொண்டு மிரட்டும்வகையில் பணம் பறித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பக்தர்கள் கொடுக்கும் புகாரின் பேரில் குற்றத்தில் ஈடுபடும் திருநங்கைகள் மீது குண்டர் சட்டம் பாயும் என்றும் எச்சரித்தார்.

மேலும், திருநங்கைகள் தங்களுக்கு தெரிந்த தொழில்கள், வேலைகள் குறித்து தெரிவித்தால் அரசிடம் பரிந்துரை செய்து தொழிற்கடன், வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, பக்தர்களிடம் பணம் வசூல் செய்யும் செயலை திருநங்கைகள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

பழனியில் வசிக்கும் திருநங்கைகள் தவிர சீசனுக்காக பழனி வந்து தங்கி பக்தர்களிடம் பணம் வசூல் செய்யும் திருநங்கைகள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி செல்ல வேண்டும்" என அறிவுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், பழனி சத்யராஜ், நகர காவல் ஆய்வாளர் உதயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கூடுதல் கட்டுப்பாடுகள்- ஸ்டாலின் நாளை ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details