தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒட்டன்சத்திரத்தில் கரோனா வைரஸ் குறித்து மருத்துவ முகாம்

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமில் காய்கறி சந்தைக்கு வரும் ஏராளமானோருக்கு கரோனா வைரஸ் குறித்து பரிசோதனை செய்து கொண்டனர்.

dindigul-corona-medical-camp
dindigul-corona-medical-camp

By

Published : Mar 16, 2020, 6:27 PM IST

சீனா உள்ளிட்ட உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரசுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

இதையடுத்து, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் அமைந்துள்ள சந்தையில் கேரளா மாநிலத்திற்கு அதிகளவில் காய்கறி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை, பேருந்து நிலையங்களில், பொது சுகாதாரத்துறை சார்பில் கரோனா விழிப்புணர்வு மருத்துவ முகாம் வட்டார மருத்துவ அலுவலர் காசிமுருகபிரபு தலைமையில் நடைபெற்றது.

கரோனா வைரஸ் குறித்து மருத்துவ முகாம்

இந்த முகாமில் ஒட்டன்சத்திரம் வட்டாச்சியர் சரவணன், நகர்புற மருத்துவ அலுவலர் சுபா, காய்கறி சந்தை நிர்வாகிகள், கேரள வியாபாரிகள், சுமை தூக்குவோர், ஓட்டுநர்கள், வியாபாரிகள், விவசாயிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டு கரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொண்டனர்.

இதையும் படிங்க: கொரோனா அறிகுறி: சிறப்பு மருத்துவ முகாம் கொண்டுசெல்லப்பட்ட பயணிகள்

ABOUT THE AUTHOR

...view details