தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் - ஆட்சியர்

திண்டுக்கல் : கரோனா தொற்று பரவலை தடுக்க கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

corona precautions should be speed up : collector
corona precautions should be speed up : collector

By

Published : Jul 7, 2020, 8:42 AM IST

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுக்கா முழுவதும் கரோனா பெருந்தொற்று அதிகமாக பரவி வருகிறது. நிலக்கோட்டை தாலுக்கா மதுரை, தேனி மாவட்ட எல்லைகளில் அமைந்துள்ளதால், வெளிமாவட்ட மக்கள் வருகையின் காரணமாக தொற்று அதிகளவில் பரவி வருகிறது. இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்படும் தாலுக்காவாக நிலக்கோட்டை உருவெடுத்துள்ளது.

இதையடுத்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி நிலக்கோட்டை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர், நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்கள், காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இதைத்தொடர்ந்து கிராமப்பகுதிகள், மாவட்ட எல்லைப் பகுதிகளில் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்த அறிவுறுத்தினார். மேலும், பொதுமக்களிடம் கரோனா தொற்றின் தீவிரத்தன்மையை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அலுவலர்களை அறிவுறுத்தினார்.

ABOUT THE AUTHOR

...view details