தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திண்டுக்கல்லில் இரண்டாயிரத்தை தாண்டிய கரோனா பாதிப்பு!

திண்டுக்கல்லில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

திண்டுக்கல் அரசு மருத்துவமனை
திண்டுக்கல் அரசு மருத்துவமனை

By

Published : Jul 24, 2020, 8:22 PM IST

Updated : Jul 24, 2020, 8:52 PM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்கிடையில் இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரேநாளில் 80 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2012ஆக அதிகரித்துள்ளது.

இதில் ஆயிரத்து 450 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 531 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை 31 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் திண்டுக்கல் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் உள்ள இணை இயக்குனர் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் அலுவலர் ஒருவருக்கும் கரோனா உறுதியாகியுள்ளது.

இதையடுத்து அவர் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். தொடர்ந்து இணை இயக்குனர் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Last Updated : Jul 24, 2020, 8:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details