தமிழ்நாடு

tamil nadu

தென்னை, வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டுயானைகள்!

By

Published : Nov 25, 2019, 10:39 PM IST

திண்டுக்கல்: சேர்வைகாரன்பட்டி அருகே தென்னை, வாழை தோட்டங்களில் காட்டுயானைகளின் அட்டகாசத்தால் 50க்கும் மேற்பட்ட தென்னை, வாழை மரங்கள் சேதமடைந்தன.

dindugul

திண்டுக்கல், பண்ணைப்பட்டி அருகே கடந்த சில நாட்களாக மூன்று காட்டுயானைகள் உலா வருதாக வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தும் வனத்துறையினர் அலட்சியமாக இருந்து வந்துள்ளனர்.

இதன் விளைவாக ஒரு குட்டியுடன் மூன்று காட்டு யானைகள் சேர்வைகாரன்பட்டியில் உள்ள தென்னை, வாழைத் தோட்டத்திற்குள் புகுந்து 40 தென்னை மரங்கள், 50க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தியுள்ளன.

தென்னை, வாழை மரங்கள் சேதம்

தென்னை, வாழை சேதம் மட்டுமல்லாமல் அப்பகுதிமக்கள் யானைகளின் அட்டகாசத்தால் வீட்டவிட்டு வெளியேற முடியாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். எனவே வனத்துறையினர் யானைகளை விரட்ட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:பொள்ளாச்சியில் காட்டு யானையை பிடிக்க வனத்துறை தீவிரம்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details