தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தினமலர் நாளிதழ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்

திண்டுக்கல்: கிறிஸ்தவ மக்கள் மனதை புண்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளரிடம் கிறிஸ்தவ வன்னியர் இளைஞர் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.

வன்னியர் இளைஞர் சங்கம் புகார்

By

Published : Apr 23, 2019, 7:52 PM IST

இலங்கையில் நேற்று முன்தினம் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனையின்போது நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பின் காரணமாக 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இலங்கையில் நிகழ்ந்த இந்தத் துயர சம்பவத்திற்கு உலகத் தலைவர்கள் அனைவரும் தங்களது இரங்கலையும், கண்டனங்களையும் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பான செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழ், ஓ சேசப்பா!என்ற தலைப்பை வைத்திருந்தது. இந்த தலைப்பு கிறிஸ்தவ மக்கள் புண்படும் வகையில், ஏளனம் செய்யும் தொனியில் இருந்ததால் தினமலர் நாளிதழ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளரிடம் கிறிஸ்தவ வன்னியர் இளைஞர் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

நேற்றைய செய்தி தலைப்பின் எதிரொலியாக தினமலர் நாளிதழ் இன்றைய செய்தித்தாளில் ஓ சேசப்பா! என்பது இலங்கை வட்டார பேச்சு வழக்கு என விளக்கம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வன்னியர் இளைஞர் சங்கம் புகார்

ABOUT THE AUTHOR

...view details