தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் - பாதிக்கப்பட்ட நபர் தீக்குளிக்க முயற்சி!

திண்டுக்கல்: ஆயக்குடியில் வாரிசு சான்றிதழ் வழங்க வருவாய் ஆய்வாளர் லஞ்சம் கேட்டதால், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்ட நபர் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

bribe-to-issue-certificate-of-heir-attempt-to-set-fire-victim
bribe-to-issue-certificate-of-heir-attempt-to-set-fire-victim

By

Published : Aug 18, 2020, 9:57 PM IST

பழனி அருகே பழைய ஆயக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் கிருஷ்ணகுமார். இவரின் தாத்தா ராமசாமி கடந்த 2009 ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார்.

ராமசாமியின் வாரிசுகளான மகன் சந்திரன் , மகள் ஜெயலட்சுமி உள்ளிட்டோருக்கு வாரிசு சான்றிதழ் கேட்டு கிருஷ்ணகுமார் விண்ணப்பித்துள்ளார்.

இந்த நிலையில் ஆயக்குடி வருவாய் ஆய்வாளர் காஜாமைதீன் என்பவர் வாரிசு சான்றிதழ் வழங்க, 22 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார்.
லஞ்சம் தர கிருஷ்ணகுமார் மறுத்த நிலையில், வாரிசு சான்றிதழ் வழங்க முடியாது என அவமதித்து திருப்பி அனுப்பியுள்ளார்.

இதனால் மனமுடைந்த கிருஷ்ணகுமார் டீசல் கேனுடன் ஆயக்குடி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு வந்து, தீக்குளிக்க முயற்சித்துள்ளார்.

இதனைக் கண்ட பொதுமக்கள் அவரை தடுத்து நிறுத்தினர். பின் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கிருஷ்ணகுமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.

வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் - பாதிக்கப்பட்ட நபர் தீக்குளிக்க முயற்சி!

வாரிசு சான்றிதழ் வழங்க வருவாய் ஆய்வாளர் லஞ்சம் கேட்டதால், ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:திருநெல்வேலி கொண்டுவரப்பட்ட தனிப்படை காவலர் உடல்!

ABOUT THE AUTHOR

...view details