தமிழ்நாடு

tamil nadu

'ஓபிஎஸ் கூறினால் மக்கள் எடப்பாடிக்கு வாக்களித்து விடுவார்களா?' - கூறுகிறார் திமுக எம்எல்ஏ!

திண்டுக்கல்: ஓபிஎஸ் கூறினால் மக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஓட்டுப் போட்டு விடுவார்களா? ஆட்சி மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது என்று பழனி சட்டப்பேரவை திமுக உறுப்பினர் செந்தில் குமார் தெரிவித்தார்.

By

Published : Oct 7, 2020, 4:05 PM IST

Published : Oct 7, 2020, 4:05 PM IST

ETV Bharat / state

'ஓபிஎஸ் கூறினால் மக்கள் எடப்பாடிக்கு வாக்களித்து விடுவார்களா?' - கூறுகிறார் திமுக எம்எல்ஏ!

-senthil-kumar
-senthil-kumar

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் பண்ணைக்காடு கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் பத்து லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது. நிழற்குடையை பழனி சட்டப்பேரவை திமுக உறுப்பினர் செந்தில்குமார் திறந்துவைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கடந்த 25 நாள்களாக நடந்துவந்த அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் நாடகம் இன்று முடிவுக்கு வந்துவிட்டது. ஓபிஎஸ் கூறினால் மக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஓட்டுப் போட்டு விடுவார்களா? ஆட்சி மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது. தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளும் பறிபோய்விட்டன. இதனைத் தட்டிக்கேட்க அதிமுக அரசுக்குத் துப்பில்லை” என்றார்.

திமுக எம்எல்ஏ செந்தில் குமார்

தொடர்ந்து பேசிய அவர், "கொடைக்கானல் போன்ற மலைப் பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல இ-பாஸ் முறை நடைமுறையில் இருந்துவருவதால், காமக்காபட்டி முதல் கொடைக்கானல் வெள்ளிநீர் அருவி பகுதிவரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

சுற்றுலாப் பயணிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகும் நிலை இருப்பதால், மற்ற எல்லா பகுதிகளுக்கும் இ-பாஸ் முறையை ரத்து செய்ததுபோல், கொடைக்கானல் பகுதிக்குச் செல்ல இ-பாஸ் முறையை தமிழ்நாடு ரத்துசெய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:முதலமைச்சர் வேட்பாளர் இபிஎஸ் - ஓபிஎஸ் மகிழ்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details