தமிழ்நாடு

tamil nadu

காட்டுப்பன்றிகள் அட்டகாசம் கலங்கும் நிலக்கடலை விவசாயிகள்!

By

Published : Jul 30, 2020, 3:21 PM IST

தருமபுரி: பென்னாகரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலக்கடலை செடிகளை நாசப்படுத்தும், காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

wild boars ruinate groundnut
wild boars ruinate groundnut

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த கோடுபட்டி கீழ் சக்கில் நத்தம் பகுதியில் அதிகளவில் நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளது. அத்துடன் கம்பு, சோளமும் பயிரிப்படுகின்றன.

கீழ் சக்கில் நத்தம் பகுதி காட்டுப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ளதால், அங்கிருந்து வரும் காட்டுப்பன்றிகள் இரவில் நிலக்கடலை செடிகளை நாசப்படுத்திவிட்டுச் செல்கின்றன.

இதுகுறித்து விவசாயி லோகுதேவன் என்பவர், "5 ஏக்கர் நிலப்பரப்பில் கம்பு, சோளம், நிலக்கடலை விவசாயம் செய்துவருகிறேன். அவற்றை காட்டுப்பன்றிகள் தினமும் இரவில் நாசப்படுத்துகின்றன. அதனால் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே வனத் துறையினர் உடனடியாக காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்" எனக் கோரிக்கை வைத்தார்.

இதையும் படிங்க:பன்றிகளை உயிருடன் புதைத்த விவசாயிகள்!

ABOUT THE AUTHOR

...view details